தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 ஆக உயர்வு – சட்டமூலத்தில் கைச்சாத்திட்டார் சபாநாயகர்!
Wednesday, November 17th, 2021தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் சாபாநாயகர் குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
முன்பதாக நவம்பர் 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் இலங்கையின் தனியார் துறை ஊழியர்களின் புதிய குறைந்தபட்ச ஓய்வு வயது 60ஆக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது 55 வயது நிரம்பியவர்கள், 57 வயது வரை பணிபுரியலாம் என்றும் 53 முதல் 54 வயது வரை உள்ளவர்கள் 58 வயது வரையும், 52 வயது நிரம்பியவர்கள் 59 வயது வரையும் பணிபுரியலாம் என்றும் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 52 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் புதிதாக பணிக்கமர்த்தப்பட்டவர்கள் புதிய ஓய்வு பெறும் வயதான 60 வயது வரை பணியாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 50 வயதுடைய பெண்களும் 55 வயதுடைய ஆண்களும் தங்கள் விருப்பப்படி ஓய்வு பெறலாம் என்றும் புதிய சட்டமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|