தனியார் துறையினரையும் இலஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தினுள் உள்வாங்க நடவடிக்கை!
Monday, April 30th, 2018தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களையும் இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தினுள் உள்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில் தனியார்துறை ஊழியர்களுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்புச் சட்டங்களின் பிரகாரம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையில் தனியார்துறை ஊழியர்கள் இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் இலஞ்ச, ஊழல் ஒழிப்புச் சட்டம் திருத்தப்படவுள்ளது.
இத்தகவலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் 85 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்ட இலஞ்ச வழக்குகளில் 52 பேர் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று இந்த வருடம் இதுவரையான காலப்பகுதிக்குள் 32 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டங்களின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என்றும் சரத் ஜயமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|