தனியார் துறைக்கு பல்கலைக்கழகங்கள் வழங்கப்படமாட்டாது – அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல!

Saturday, July 8th, 2017

கொழும்பு பல்கலைக்கழகம்,பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றை  தனியார் துறைக்கு வழங்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற  உயர்கல்வி தொடர்பான தனிநபர் பிரேரணையில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றினார்.அவர் தனது உரையில் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலிருந்து அகற்றி, அவற்றை இலாபமீட்டும் சுயாதீன நிறுவனங்களாக மாற்றவிருப்பதாக ஊடகங்களில் செய்தி சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளிக்கையிரேயே உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts: