தனியார் காணிகளை சுவீகரிக்க மாதகலில் முயற்சி – பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பதற்றம்!

மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் தினைக்களத்தினர் இன்று வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை நில அளவைத் திணைக்களத்தினர் கடற்படையினருக்கு அளப்பதற்கு இன்று வருகை தந்திருந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில அளவைப் பணியை கைவிட்டு விட்டு திரும்பி சென்றனர்.
குறித்த சம்பவத்தை அடுத்து சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. குறித்த மக்களின் போராட்டத்தின் போது ஏராளமான பொலிஸாரும் கடற்படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஸ்ரீலங்கன் விமானசேவையை குறுகிய காலத்திற்குள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான தீர்மானம் உறுதி!
கிழக்கில் நாளாந்த திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - மாகாண ஆளுநர் தெரிவிப்பு!
|
|