தனியார் கல்வி நிறுவனங்களிடம் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள்!

Friday, February 9th, 2018

தனியார் கல்வி நிறுவனற்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் விதத்தில் தேர்தல் தினத்தில் பாட வகுப்புக்களை அமைத்துக் கொள்ளுமாறு  தேர்தல்கள் ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேர்தல் தினத்தில் நடைபெறும் பாட வகுப்புக்கள் மற்றும் பரீட்சைகள் காரணமாக வாக்களிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு தேர்தல் தினத்தில் மாணவர்களின் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு பாதகமில்லாத வகையில் பாட வகுப்புக்கள் மற்றும் பரீட்சைகளை நடத்துமாறு தேர்தல்கள் ஆணையகம் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளது

Related posts: