தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

மின்சார அலகுகளின் பாவனையைக் குறைப்பதற்காக 50 மெகாவோட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் தனியார்துறை ஊடாக மேலும் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போது இவ்விடயத்தை தெரிவித்த அவர் இந்த நடவடிக்கை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு அறிவிக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 100 மெகாவோட் தனியார் துறையிலிருந்து பெறப்பட்டு தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
49 மில்லியன் அலகுகள் 40 மில்லியன் அலகாக குறைக்கப்படும் என்றும், அடுத்த ஒன்றரை மாதங்களில் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
நீண்டகால மின்சாரம் தடைப்பட வேண்டிய அவசியம் தற்போது இல்லை. எனவே இலங்கை மின்சார சபை உட்பட அனைத்து நிறுவனங்களும் மின்சாரப் பிரச்சினையைக் கையாளும் போது ஒரே மாதிரியான சிந்தனைப் போக்கைக் கொண்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், போதுமான எரிபொருள் வழங்கப்படும் மற்றும் பெரிய அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழக்கக் கூடாது என்ற அடிப்படையில் இது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|