தனியான வளாகமாக மாறுகிறது வவுனியா பல்கலைக்கழகம்!

வவுனியாவில் இயங்கிவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நிதி ஒதுக்கீடுகள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பாதீட்டின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த வருடத்திற்குள் வவுனியாவில் தனியாக பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிஙக் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஆகியோரால் உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன், தனியான பல்கலைக்கழகமாக உருவாக்கப்படுகின்றபோது, விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் தகவல் தொழிநுட்பம் என்ற இரண்டு புதிய பீடங்களை பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா தனியான பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டதன் பின்னர், பல்மருத்துவம், மீன்பிடி தொழிநுட்பம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன.
Related posts:
|
|