தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இரத்து – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!

Friday, April 30th, 2021

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, இருக்கைகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை காலவரையறையின்றி இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசார் மற்றும் மாகாணப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் ரயில்களிலும் , பணிபுரியும் இடங்களுக்கு அதிகமான பயணிகள் வருகை தருகின்றனர்.

அலுவலக நேரங்களிலும் புகையிரதங்களில்  நெருக்கடிகள் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றால் அதற்கும் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: