தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

Saturday, April 24th, 2021

முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான, தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பில், காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக பதிவாகின்றன. இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் அதிக அவதானத்துடன் செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: