தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி!
Monday, October 12th, 2020தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மாணவர்கள் வீடுகளுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 71 ஆண் 304 பெண் மாணவர்கள் உள்ளிட்ட 375 மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
கோப்பாய் தேசியக் கல்வியல் கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட உள்ளதன் காரணமாக மாணவர்களை தமது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டது.
அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்து வண்டிகளில் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினைகல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்தது.
இன்று காலையில் சுமார் எட்டு பேருந்துகளில் மாணவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ள்ளார்கள். அத்தோடு குறித்த கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றும் முகமாக இராணுவத்தினரால் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|