தனிமைப்படுத்தல் செயற்பாட்டை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர் – இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா தெரிவிப்பு!

Thursday, May 21st, 2020

முப்படையினரால் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை பூர்த்தி செய்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, இதுவரையில் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1027 எனவும், குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 584 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த 20 நாட்களில் தனிமைப்படுத்தல் முகாம்கள் மற்றும் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் தவிர்ந்த எவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: