தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 43 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் – சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 190 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இத்துடன் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 50 ஆயிரத்து 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 43 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் 7 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வடக்கில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை! - பொலிஸ்மா அதிபர்!
டெங்கின் தாக்கம் அதிகரிப்பு: யாழில் ஒருவர் உயிரிழப்பு !
மலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு !
|
|