தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14,766 பேர் இதுவரை கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 14,766 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சக்கோட்டை கடற்கரையில் இருந்து 118 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!
சாரதி கவனக் குறைவு: அதிர்ச்சியில் பெண் பலி!
கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்...
|
|