தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் கைது – பொலிஸார் தகவல்!

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அவர்களுள் 134 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் கொழும்பில் 34 பேர், கம்பஹாவில் 45 மற்றும் களுத்துறையில் 50 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3470 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜுன் முதல் வாரத்தில் அனைத்து பாடசாலைகளையும் திறக்க தீர்மானம் என்ற செய்தியில் எதுவித உண்மையும் கிடையா...
யாஸ் சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருகோடி மக்கள் பாதிப்பு :15 இலட்சம் பேர் வெளியேற்றம்!
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலங்கை பொது...
|
|