தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பொலிஸார் எச்சரிக்கை!

Thursday, July 22nd, 2021

மக்கள் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவார்களேயானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் கடந்த காலங்களை போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் வீரியம் கொண்ட டெல்டா வைரஸ் பரவல் காணப்படுகின்றமையினால், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், வார இறுதி நாட்களில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸார் அறிவுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: