தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினால் தேசத்துரோக் குற்றம் – எவ்வித கருணையும் காட்டப்படாது என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதிப்பொலிஸ் மா அதிபர்!

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல் துரோகத்தனமாகவே கருதப்படும் என்நு காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்கள் மீது எவ்வித கருணையும் காட்டப்படாது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். நடைமுறை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அதனை பெறுவோர் நாட்டினால் துரோகிகளாகவே கருதப்படும் வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இவர்களுக்கு எதிராக மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும் அதேபோன்று அபராதமும் விதிப்பதற்கு சட்ட நடைமுறை இருப்பதாகவும் அஜித் ரோகன குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டின் சில பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் விரைவு ஆன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் சிலர் மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவ்வாறானவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இடம் இருப்பதாக அஜித் ரோகன எச்சரிக்கை விடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|