தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, September 2nd, 2021

நாடுமுழுவதும் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா என்பது தொடர்பான தீர்மானம் நாளையதினம் அறிவிக்கப்படும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் ஒழிப்பு செயலணியின் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ள நிலையில், அதன்போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்வின்றி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை திங்கட்கிழமையுடன் தளர்த்துவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்த நாளைதினம் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இனப் பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்:  யாழில் ஜோசப் ஸ்...
ஆறு மாதங்களுக்குப் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம் - ஆசிரியர்களின் வருகையில் வீழ்ச்சி - மாணவர்கள்...
பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் - இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரிக்கும் என ஆய்...