தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 4 இல் வாக்களிக்க சந்தர்ப்பம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Thursday, July 16th, 2020

பொலிஸார், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாவட்ட செயலாளர் காரியாலயங்கள், தேர்தல் செயலக அதிகாரிகள் ஆகியோர் இன்று (16) தபால் மூலம் வாக்களித்துள்ளனர்

வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றன. ஆனால் நாளையதினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாத்திரமே வாக்களிக்க சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறுவோர் எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி பொது தேர்தலை நடத்த அர்பணிப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அதற்குள் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts: