தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் தப்பியோட்டம்- போகம்பறை சிறையில் ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, November 18th, 2020

கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதன்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறைச்சாலையில் 800 இற்கும் அதிகமான கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 30 கைதிகள் மற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: