தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !

Wednesday, March 9th, 2022

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கும் போது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அதற்கு ஆட்சேபனை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, முதற்பக்கத்தை கூட படிக்காமல் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல 14 நாட்கள் கால அவகாசம் இருந்த போதிலும், அக்காலப்பகுதியில் எவரும் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை எனவும் அதற்குப் பிறகு நீதிமன்றம் சென்றும் பயனில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தச் சட்டம், ஊடக உரிமைகளை குறைக்காது என்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, தரவு பாதுகாப்பு அதிகாரசபைக்கு பிரதிநிதிகளை நியமிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரியது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: