தனிநபர் முற்பண வருமான வரி வசூல் அதிகரிப்பு – மூன்று மாதங்களில் 25 ,577 மில்லியன் ரூபா அறவீடு என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023

தனிநபர் முற்பண வருமான வரி வசூலில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான தரவில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனவரி மாதத்தில் தனிநபர் முற்பண வருமான வரியாக 3106 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் 10,540 மில்லியன் வரை அந்த தொகை அதிகரித்துள்ளதுடன், மார்ச் மாதத்தில் 11,931 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதல் காலாண்டின் முதல் மூன்று மாதங்களில் தனிநபர் முற்பண வருமான வரியாக 25 ,577 மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சந்தை வட்டி வீதங்களை தீர்மானிக்கும் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை மாற்றமில்லாமல் பேணுவதற்கு நாணய சபை தீர்மானித்துள்ளது.

பணவீக்கத்தை குறைப்பதற்கான  நடவடிக்கையாக  தொடர்ந்தும் கடும் நாணயக் கொள்கையை பின்பற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்தவாறு பண வீக்கம் குறைவடையும் நிலை காணப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதியளவில் பணவீக்கம் 10 வீதத்தை விட குறைந்த எண்ணிக்கையில் அமையும் என்பதே மத்திய வங்கியின் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை!
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்பு – தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிப்பு!
இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்க விசேட வர்த்தமானி!