தனித்தனியே அரசனாவதற்கு முயலாது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இந்நாட்டு மக்களை அரசர்களாக முடியும் – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Friday, January 21st, 2022

அரசாங்க அமைச்சர்கள் தங்களில் மனதில் உள்ள பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில் – ‘இந்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களித்தது ஒவ்வொருவரும் அரசனாகுவதற்கு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதியை தெரிவு செய்தால் அந்த ஜனாதிபதியின் கொள்கையை பின்பற்ற வேண்டும். நாம் அனைவரும் தனித்து ஆட்சியமைக்க முயலாமல் மக்களை ஆள முயற்சித்தால் சிறப்பாக இருக்கும்.

தற்போது உலகளாவிய ரீதியில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கையிலும் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நமது நாட்டின் பொருளாதாரத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே அரசனாவதற்கு போராடுவதை விடுத்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இந்நாட்டு மக்களை அரசர்களாக முடியும் என நினைக்கின்றேன்.

எனவே, தனிப்பட்ட கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: