தனது நிறுவனத்தை இராணுவ புலனாய்வாளர்களே எரித்தார்கள் என மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்த சரவணபவன் இன்று பிதற்றுகிறார்!

தனது பத்திரிகையை இராணுவ புலனாய்வாளர்களே எரித்தார்கள் என மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்த சரவணபவன் தற்போது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியே செய்தது என தனது பத்திரிகையில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறா என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமிடியஸ் தெரிவித்தார்
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிரைகயாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்தபோது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது குற்றச்சாட்டுகள் இருந்திருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்தபோது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்கள்.?
தமிழ் மக்களை இராணுவம் கடத்தியது இராணுவம் சித்திரவதை செய்தது என ஐநாவரை சென்று கோசம் போடும் கூட்டமைப்பினர் தற்போது தேர்தலுக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கடத்தியது என கூறுகின்றனர் .
ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வழமையாக தேர்தல் நெருங்கும் நிலையில் எவ்வாறு செயற்படும் என்பதை மக்கள் நன்குணர்ந்த நிலையில் அவர்களுக்கு நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் நல்ல படிப்பினையைக் கற்றுக் கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|