தனது தாயை தேடி அலையும் மகள்:  தகவலறிந்தவர்கள் உதவ முடியும்!

Friday, October 27th, 2017

தனது உண்மையான தாய் யார்? என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்துள்ள பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ரெபேக்கா நளாயினி என்ற பெண் தனது தாயை கண்டுப்பிடிக்கும் நோக்கில் மீண்டும் இலங்கை வந்துள்ளதாகவும், இவரின் குடும்பம் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரெபேக்கா தனது குழந்தைகளுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்த நிலையில், 2003ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள தனது உண்மையான தாயை தேடுவதற்கு ஆரம்பித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆறு முறை மரபனு பரிசோதனை மேற்கொண்டிருந்த போதிலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே, தனது தாயை எவ்வாறாயினும் கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் ரெபேக்கா இம்முறை இலங்கை வந்துள்ளார்.இது குறித்து ரெபேக்கா கருத்து தெரிவிக்கையில், “நான் மீண்டும் இலங்கை வந்து ஆரம்பத்திலிருந்து தேடுகின்றேன்.

இந்த நாட்டில் இது எனக்கு மிகவும் சிரமமான விடயம்.நான் உயிரிழக்கும் போது நான் யார்? என்று அறிந்துகொண்டால் அதுவே போதும். எனது கல்லறையில் யாரேனும் ஏதும் எழுதினால் அது உண்மையாக இருக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, 1979ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் பிறந்த ரெபேக்கா, சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அநாதரவாக கைவிடப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

Related posts: