தந்தையின் விபரீத முடிவு: ஆபத்தான நிலையில் பிள்ளைகள் – யாழ்ப்பாணத்தில் சோகம்!

Tuesday, May 1st, 2018

யாழ்ப்பாணத்தில் தந்தை ஒருவரின் விபரீத முடிவினால் இரு பிள்ளைகள் உட்பட அவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் நேற்று இரவு தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளார்.

35 வயதான அவர் தனது 10 வயதுடைய மகன் மற்றும் 7 வயதுடைய மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஷம் அருந்தியமையினால் ஆபத்தான நிலையில் உள்ள குறித்த மூவரும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மற்றும் இரண்டு பிள்ளைகளைப் பிரிந்து தாய் வாழ்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் விஷமருந்தியமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: