தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது பாலகி மரணம் – அராலிப் பகுதியில் சோகம்!

Friday, June 1st, 2018

விளையாடும் போது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த இரண்டு வயது பாலகி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அராலிப் பகுதியில் இடம்பெற்றது.

அராலி கிழக்கு வாலைஅம்மன் கோவிலடி பகுதியை சேர்ந்த பார்த்திபன் பானுயா என்ற இரண்டரை வயது பாலகியே மேற்படி உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுமியும் அவரது சகோதரியும் நேற்று காலை தண்ணீர் தொட்டிக்கு அருகில் இருந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது குறித்த சிறுமி அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். இதேவேளை குழந்தைகளைத் தேடி உறவினர் அப்பகுதிக்கு வந்த போது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து நீரில் மூழ்கி கிடந்ததை அவதானித்துள்ளனர். உடனடியாக மீட்ட போது சிறுமி உயிரிழந்து காணப்பட்டுள்ளாள்.

குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: