தண்ணீரைத் தூய்மையாக்க உதவுகிறது முருங்கை மரம்!

Friday, June 22nd, 2018

தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் தண்ணீரைத் தூய்மைப்படுத்த உதவும் மரம், செடி, கொடிகள் குறித்து ஆராய்;ச்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் குறைந்த செலவில் நீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவுகிறது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உணவுக்காக வளர்க்கப்படும் முருங்கை மரத்திலிருந்து கீரை, முருங்கைக்காய், முருங்கைப் பூ போன்றவற்றை இந்திய இலங்கை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் தாவரவியல் பெயர் மோரிங்கா ஓலைபெரா ஆகும். முருங்கையில் இருந்து எப்சான்ட் என்ற பொருளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஒரு தொட்டியில் மணலைப் பரப்பி அதன் மேல் சிலிக்கன் துகள்களைக் கொட்டி பின்னர் முருங்கைக் கீரை, விதையிலிருந்து பிரிகை செய்யப்பட்ட பதார்த்தங்களைப் பரவலாக வைப்பதே எப்சான்ட் என்பதாகும். இந்த எப்சான்ட் என்பது மிகவும் குறைந்த செலவில் நீரைத் தூய்மையாக்க உதவுகிறது.

மேலும் எப்சான்ட் மூலம் தண்ணீரைச் செலுத்தும்போது அதிலிருக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன. மேலும் தேவையில்லாத பொருள்கள் வடிகட்டப்படுகின்றன. நீரிலிருந்து அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன. இதன்மூலம் தண்ணீர் நீண்ட நாள்களுக்கு சுத்தமாக இருக்கும்.

Related posts: