தண்டவாளத்தைவிட்டு விலகி வீதியில் பயணித்த உத்தரதேவி!

Saturday, September 3rd, 2016

யாழ். புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த உத்தரதேவி கடுகதி புகையிரதம்  இன்று காலை 5.30. தண்டவாளத்தைவிட்டு விலகி வீதியில் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

உத்தரதேவி கடுகதி புகையிரதம் இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படுவதற்கு காங்கேசன்துறையிலிருந்து யாழ். புகையிரத நிலையத்திற்கு பயணித்த போதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தண்டவாள தடுப்புக்கள் செயலிழந்ததன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த விபத்தினால் உயிரச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த விபத்தின் காரணமாக சுன்னாகம் புகையிரத நிலையம் வரையில் புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விபத்திற்குள்ளான புகையிரத பெட்டிகளை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

CrZ6nyTWEAAYlxD

Related posts: