தண்டப்பண நடை முறை நாட்டுக்கு மிக அவசியம் – பொலிஸ் மாஅதிபர்!

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிரான தண்டப்பண நடை முறை நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் பொலிஸார் மத்தியில் பொலிஸ் மா அதிபர் உரையாற்றினார்.
போக்குவரத்து தண்டப்பண நடை முறை போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறாதவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். அரசாங்கம் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிரான தண்டப்பணத்தை அறவிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறது.
அபிவிருத்தியடைந்த அனைத்து நாடுகளும் இதே நடைமுறையைதான் செயற்படுத்தி வருகின்றன. கவனமின்றி வாகனம் செலுத்துதல் மற்றும் அதிக வேகம் காரணமாக வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக பொலிஸார் கடுமையாக பணியாற்றி வருவதாகவும் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|