தண்டனை வழங்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை- பொலிஸ் ஆணைக்குழு!

சந்தேக நபர்களை கைது செய்து துன்புறுத்தும் எவ்வித அதிகாரமும் பொலிஸாருக்கு கிடையாது என சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஒழுக்கநெறி கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் எந்த நபராக இருந்தாலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், போர் நிலைமை என்ற எந்த காரணங்களின் அடிப்படையிலும் சந்தேக நபர்களை தண்டிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது. ஆணைக்குழு வெளியிட்டுள்ள இந்த ஒழுக்கநெறி கோவையில் உள்ள வழிக்காட்டுதலை பொலிஸார் பின்பற்ற வேண்டும்.
அரசியல் ஸ்திரமின்மை அல்லது அவசர நிலைமை போன்ற விசேட விடயங்களின் அடிப்படையிலும் பொலிஸார், சந்தேக நபர்களுக்கு எவ்வித தண்டனையையும் வழங்கக்கூடாது மேலும் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் உடல் நிலைமை குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவையான நேரத்தில் மருத்து உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஆணைக்குழுவின் ஒழுக்க நெறி கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவசியமான நேரத்தில் மாத்திரமே பொலிஸார் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். கடமையை நிறைவேற்ற போதுமான அளவில் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். பொலிஸாருக்கு தண்டனை வழங்கும் எவ்வித நீதிமன்ற அதிகாரமும் வழங்கப்படவில்லை. எந்த நபராவது பொலிஸ் அதிகாரியின் பெயர் அல்லது உத்தியோகபூர்வ இலக்கத்தை கூறினால், அந்த அதிகாரி குறித்து உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|