தட்டுப்பாட்டை குறைக்க ஜனவரியில் ஒரு இலட்சம் மெட்றிக்தொன் அரிசி இறக்குமதி!

Thursday, December 29th, 2016

தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனவரியில் வெளிநாடுகளிலிருந்து ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தள்ளார்.

அரசாங்கத்தின் செலவின்றி முற்றும் முழுதாக தனியாரின் செலவுடன் இந்த அரிசி இறக்குமதி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனவரி 04 ஆம் திகதி அரிசி இறக்குமதிக்கான உத்தியோகபூர்வ பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஜனவரி 17 ஆம் திகதியளவில் இறக்குமதி பூர்த்தியடைந்து அரிசிக்கான தட்டுப்பாடு நிறைவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிதி அமைச்சில் நேற்று காலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.

‘பொதுவாக எட்டு இலட்சம் ஹெக்டேயரில் நெற்பயிர்ச் செய்கை பண்ண முடியும். ஆனால் இம்முறை நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக 02 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் மட்டுமே பயிர்ச் செய்கை இடம்பெற்றுள்ளது. வர்த்தக அமைச்சு ஜனவரி முதலாம் திகதி முதல் இதற்கான பணிகளை ஆரம்பிக்கும். பதிவுகள் முடிவடைந்ததும் ஜனவரி 04 ஆம் திகதி முதல் இறக்குமதி பணிகள் ஆரம்பமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் ஒரு சதத்தையேனும் செலவு செய்யப் போவதில்லை. அனைத்தும் தனியாரினாலேயே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். எனினும் அரிசி இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்கள் வர்த்தக அமைச்சில் இதற்கென நியமிக்கப்பட்ட விசேட குழு மற்றும் வாழ்க்கைச் செலவு குழு ஆகியவற்றினால் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரிசி இறக்குமதி செய்யப்படுவதனால் விவசாயிகள் எச்சந்தர்ப்பத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். இறக்குமதி செய்யப்படும் இந்த அரிசி வர்த்தக அமைச்சு மற்றும் சுங்க அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடனேயே களஞ்சியசாலையிலிருந்து வௌியே எடுக்க முடியும் என்பதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு இடம்பெறாத வகையிலேயே குறித்த அரிசி விற்பனைக்கு விடப்படும் என்றும் தெரிவித்தார்.

1870272177Untitled-1

Related posts: