தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை!

Saturday, July 8th, 2017

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த உள்ளதாகவும் டைனமைட் முறையில் மீன்பிடிப்பது மிகவும் மோசமான ஒன்று எனவும் கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்த சட்ட மூலத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் தான் முன்னெடுத்துள்ளதாகவும் கடல் வளத்தை பாதுகாத்து எதிர்காலத்திற்கு நல்ல நிலையில் கடல்வளத்தை வழங்குவது தமது பொறுப்பு எனவும் இதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டைனமைட் உபயோகதித்து மீன்பிடியில் ஈடுபடுவோரை வெடி பொருள் உபயோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீன்பிடிப்பதற்கு வரையரைகள் விதித்துள்ளமையால் அதிகமான மீன்களை பிடிக்க முடியாத நிலைக்கு மீன்வர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் போதுமான அளவில் மீன்பிடிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: