தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகள் இன்னும் விற்பனையில்!

Thursday, May 31st, 2018

தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகள் இன்னும் வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உரிய தரத்துடன் உற்பத்தி செய்யப்படும் உணவு பொதி செய்யும் பொலித்தீன் வகைகளுக்கு உரிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவும் அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் தினத்தில் உரிய தரத்துடனான உணவு பொதி செய்யும் பொலித்தீன் உற்பத்தியில் இருந்து தாம் விலக தீர்மானித்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் அநுர ஹேரத் தெரிவித்தார்.