தடையின்றி லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, November 3rd, 2021

லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 4, ஆயிரம் மெட்ரிக் டன் பெற்றோலிய திரவ எரிவாயு அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதனால் நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக பல இடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்காலிகமாக ஏற்பட்டிருந்த இந்தத் தட்டுப்பாடு, தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: