தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் – அஸ்ட்ரா செனெகா நிறுவனம் எச்சரிக்கை!

Saturday, January 23rd, 2021

பிரித்தானியாவில் ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா செனெகா நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படக் கூடும் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்நிறுவனத்தின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தடுப்பூசி தயாரிக்கும் அளவு குறைவடைந்துள்ள காரணத்தினால் ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளின் அளவு குறைக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி ஏற்கனவே பிரித்தானிய முழுவதும் பயன்படுத்தப்பட்டாலும், இதற்கு இன்னும் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: