தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் – சுகாதார அமைச்சு நம்பிக்கை!

Thursday, October 28th, 2021

நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் தடுப்பூசி, கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்காது என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனால் சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: