தடுப்பூசி வழங்கப்படாது விட்டால் வேலை நிறுத்த போராட்டம் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021

தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் வழங்கப்படாது விட்டால் இலங்கையில் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்னும் இரண்டு வாரங்களில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவ்வாறு வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: