தடுப்பூசி பெறாத பட்சத்தில் விசா வழங்கப்படாது – சுகாதார அமைச்சு!

Sunday, February 12th, 2017

புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த தடுப்பூசியை பெற தவறும் பட்சத்தில் அவர்களுக்கான விசா வழங்கப்பட மாட்டாது என சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரேஸில் உட்பட ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் இலங்கையரும் மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது பன்றிக்காச்சல், மஞ்சள் காமாலை போன்ற அதிகரித்துள்ளதால், இந்த நோய்களை தடுக்கும் முயற்சியிலேயே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

kaba-wallpaper-1920x1200

Related posts: