தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் – அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Saturday, October 2nd, 2021

20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 3.3 மில்லியன் இளைஞர்களில் மிக குறைந்த அளவிலானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதற்காக இளைஞர்களும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: