தடுப்பூசி செலுத்தல் செயற்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு – ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக பிராணவாயுவை வழங்குவது குறித்தும் கவனம்!

Saturday, August 21st, 2021

இலங்கையின் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அலகா சிங் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல பதவியேற்றதன் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ஒருவரை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

அவசர வைத்திய வசதிகளை நாட்டுக்கு வழங்குவது குறித்தும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி இதன்போது கருத்துரைத்துள்ளார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி பிராணவாயு விநியோகித்தல் குறித்து கவனம் செலுத்துவதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: