தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது – சுகாதர அமைச்சு அறிவிப்பு!

Monday, June 14th, 2021

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் இதுவரை 27 இலட்சத்து 74 ஆயிரத்து 683 கொவிட்19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிஷீல்ட் தடுப்பு மருந்தின் முதலாவது தடுப்பூசி 09 இலட்சத்து இருபத்தையாயிரத்து 242 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது அதேநேரம் இதன் இரண்டாவது தடுப்பூசி 03 இலட்சத்து 55 ஆயிரத்து 358 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

சைனோபார்ம் தடுப்பு மருந்தின் முதலாவது தடுப்பூசி 12 இலட்சத்து 69 ஆயிரத்து 157 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 640 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் முதலாவது தடுப்பூசி 64 ஆயிரத்து 986 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டவர்களுக்கு 5,300 சைனோபார்ம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts: