தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்றுறுதி!

Tuesday, March 2nd, 2021

கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் சிலருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கொரோனா நோய் கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதார சேவை இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்குள் சிலருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்புவோர் தங்களின் பொது சுகாதார பரிசோதகரின் உதவியுடன் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 175,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts:

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் - இலங்கை ஆசிரியர் சங்கம...
ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் விசேட சந்திப்பு - சலுகை முறையில் எரிப...
புதிய வேலைத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது - அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு திறைசேரி சுற்ற...