தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் – பொலிஸ் திணைக்களம் விசேட கேரிக்கை!

Thursday, September 9th, 2021

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் சிலர் சமூக இடைவெளியை கவனத்திற்கொள்ளாது நடந்துகொள்கிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் சமூக இடைவெளி மற்றும் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத மக்களுக்கிடையே கொவிட் தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: