தடுப்பூசியைப் பெறவில்லை என்றால், உடனடியாக தெரியப்படுத்துங்கள் – கல்விசார் ஊழியர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்து!

எந்தவொரு அதிபரும், ஆசிரியரும் அல்லது கல்விசாரா ஊழியர்களும் கொவிட் -19 தடுப்பூசியைப் பெறவில்லை என்றால், கல்வி அமைச்சு உடனடியாக உங்களுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சசு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறான நபர்கள் இருந்தால், தடுப்பூசி பெற அவர் பணிபுரியும் வலய அலுவலகத்திற்கு கல்வி அமைச்சகம் தெரிவிக்கும் என்றும் தெரிவித்துள்ள கல்வி அமைச்ச அத்தகையவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது..
அதேநேரம் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு தற்போது மாகாண மட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் ஆரம்பிக்கின்றது ரஜரட்ட பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள்!
புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்கமாறு மக்களிடம...
தகவல் தொழில்நுட்ப ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக வட்டு. இந்து மாணவர்கள் களத்தில் !
|
|