தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது – தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

Sunday, July 18th, 2021

கொவிட் தொற்று தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரையில் முதலாவது தடுப்பூசி அல்லது இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்கள் 54 இலட்சத்திற்கும் அதிகமாகும் என்று தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதேநேரம் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 இலட்சத்து 46 ஆயிரம் என்றும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ‘கொவிசீல்ட்’ முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 742 என்பதுடன். இதில் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 85 ஆயிரமாகும் என்றும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது

அதேநேரம் ‘சைனோபாம்’ தடுப்பூசியில் முதல் டோசைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 42 இலட்சத்து 76 ஆயிரத்திற்கு மேற்பட்டதாகும். இதில் இரண்டாவது டோசை பெற்றவர்களின் எண்ணிககை 12 இலட்சத்து 45 ஆயிரத்து 800 என்றும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே ‘ஸ்புட்நிக் – ஏ’ தடுப்பூசியின் முதலாவது டோசைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 57 ஆயிரத்து 368 என்றும் இரண்டாவது டோசைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 500 என்றும் குறிப்பிட்டுள்ள தொற்று நோயியல் பிரிவு ‘பைஸர்’ தடுப்பூசியில் முதலாவது டோசைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 793 என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: