தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோர் மாத்திரமே பேருந்துகளில் பயணிக்கலாம்!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர், தனியார் பேருந்துகளில் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களை மாத்திரம் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனவே, பயண தடை தளர்த்தப்படும் பட்சத்தில், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு மாத்திரம் பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நோய் பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தெல்லிப்பளையில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி
கம்பரலிய திட்டத்தில் மோசடி: வடமராட்சி மக்கள் ஆதங்கம்!
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கூட்டம் - ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுப...
|
|