தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் மாற்று வழி – சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு!

Monday, March 8th, 2021

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின் இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்காக மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நிறுவனத்தில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக இலங்கை பதிவு செய்திருந்த வகையில் தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் “தற்போது இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகளில் 7 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தடுப்பூசிகள் தற்போது சுகாதார தரப்பின் வசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் இரண்டாவது முறையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சில சந்தர்ப்பங்களில் குறித்த நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுமாயின் அதே தயாரிப்பை வேறு வழிகளில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள துணைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எவ்வாறாயினும் இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதில் பிரச்சினை ஏற்படாது என்றும். இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கும் காலம் வரும்போது தடையின்றி தடுப்பூசிகள் கிடைக்குமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: