தடயவியல் போதைப்பொருள் பகுப்பாய்வு தொடர்பான கருத்திட்டத்திற்கு 4 மில்லியன் நிதியை வழங்க கொரியா சர்வதேச ஒத்துழைப்புப் நிறுவனம் உடன்பாடு!

இலங்கை குற்ற நீதிச் செயன்முறையில் தடயவியல் போதைப்பொருள் பகுப்பாய்வு தொடர்பான இயலளவு விருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்புப் பிரதிநிதி நிறுவனம், 04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் மற்றும் நீதிமன்ற போதைப்பொருள் விஞ்ஞான இரசாயன ஆய்வுகூடத்தின் ஆராய்ச்சி உபகரணங்களை மேம்படுத்தல், போதைப்பொருள் மற்றும் நீதிமன்ற போதைப்பொருள் விஞ்ஞானம் தொடர்பான பயிற்சி வழங்கல் மற்றும் ஆய்வுகூடத் தகவல் முகாமைத்துவத் தொகுதியை நிறுவுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த ஒதுக்கீட்டு வழங்கலைப் பெற்றுக்கொள்வதற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்புப் பிரதிநிதி நிறுவனம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சுக்கும் இடையில் ஆய்வு வரையறைகள் உள்ளடங்கும் ‘கலந்துரையாடல் அறிக்கையில்’ கையொப்பமிடுவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|