தடயவியல் பகுப்பாளர்களின் இறுதி அறிக்கையின் பின்னரே முல்லைத்தீவு புதைகுழி தொடர்பான விடயங்கள் மக்களுக்கு தெரியவரும்!
Friday, July 7th, 2023ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு இரசாயன பகுப்பாளர்களின் இறுதி அறிக்கை வெளியானதன் பின்னரே அது தொடர்பான உண்மைகள் மக்களுக்கு தெரியவரும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (07.07.2023) யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளருடனான சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில் –
தேசிய நிர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீரிணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரங்கள் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது
இது தொடர்பாக நீதிமன்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் யூலை 06 ஆம் திகதி அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது. அதில் 13 இடங்களில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
இப்பிரதேசம் யுத்த காலப்பகுதியில் சூனியப் பிரதேசமாகவும் இரண்’டு தரப்பினரும் அவ்வப்போது கடும் மோதலில் ஈடுபட்ட பகுதியாகவும் கூறுப்படுகின்றது.
இந்த நிலையில் பகுப்பாய்வாளர்கள் தமது ஆய்வுகளை முன்னெடுது வருகின்றனர். அவர்களது ஆய்வின் இறுதி அறிக்கை வந்த பின்னரே இவ்விடயத்தின் உண்மை நிலை வெளிவரும் எனவும் நம்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|