தஜிகிஸ்தான் ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம்!

தஜிகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் இறையதினம் தினம் இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் எனஇலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரை எமோமாலி ரஹ்மான் சந்திக்கவுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது இலங்கை தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள எமோமாலி ரஹ்மான், அன்றைய தினம் இலங்கை வர்த்தக சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆயிரம் விகாரை திட்டத்தை செயல்படுத்திய கூட்டமைப்பு தேர்தலுக்காக கிழக்கை எண்ணி வடக்கில் முதலைக் கண்ணீர...
மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண...
நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது - உக்ரைனை ஆக்கிரமிக்...
|
|